மேற்கு வங்க பாஜக எம்.பி. அர்ஜுன் சிங் வீட்டுக்கு வெளியே வெடிகுண்டு வீச்சு
மேற்கு வங்கத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங்கின் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வடக்கு 24 பர்காணா மாவட்டத்தில் அர்ஜுன் சிங்கின் வீட்டுக்கு வெளியே நேற்றிரவு 3 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அப்போது அர்ஜுன் சிங் டெல்லியில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அர்ஜுன் சிங் வீட்டுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாகக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
Comments