மெக்ஸிகோவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததில் 17 நோயாளிகள் உயிரிழப்பு
மெக்ஸிகோவில் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததில் 17 நோயாளிகள் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் மத்தியப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் துலா நகரில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொரோனா மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததில் ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டதில்17 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
சுமார் 40 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
Comments