9 கிலோ தங்க பிஸ்கட்டுகளைக் கடத்தி வந்த 2 பயணிகள்... போலீசார் விரட்டிப் பிடிப்பு

0 2336

சவூதி அரேபியாவில் இருந்து 9 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளைக் கடத்தி வந்த 2 பயணிகளை உத்தரப்பிரதேச போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

ரியாத்தில் இருந்து லக்னோ வந்த அந்தப் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து தங்கத்தை கடத்தி வந்தவர்களை ஆக்ரா -லக்னோ விரைவுச்சாலையில் விரட்டி மடக்கினர். அப்போது அந்தப் பயணிகள் உள்ளாடையில் ஒரு பெல்ட்டை கட்டி அதில் 77 தங்க பிஸ்கட்டுகளை பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பயணிகள் இருவருடன், கடத்தலுக்கு காரணமான நபர், உடந்தையாக இருந்த சுங்கத்துறை காவலர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments