திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் உள்ளூர் மக்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று முதல் இலவச டோக்கன் வழங்கப்படுகிறது.
அதன்படி நாளொன்றுக்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் இலவச டோக்கன்களை பெற்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலிபிரியில் உள்ள பூதேவி தங்கும்விடுதியில் ஆதார் அட்டையைக் காண்பித்து தரிசன டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments