கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தள உடைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரம்
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளத்தில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னிலையில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்பவானி வாய்க்காலில் 140 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 35 அடி ஆழத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் வருகிற 12- ம் தேதிக்கு பிறகு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Comments