ஸ்கூலுக்கு விடுமுறை..! மட்டம் போட்ட ஆசிரியைகள்..! வறுத்தெடுத்த கலெக்டர்..! உங்க அப்பன் வீட்டு பள்ளியா.?

0 119635

கரூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனக்கு கொரோனா எனகூறி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் , ஒட்டு மொத்தமாக பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்டதோடு, பள்ளிக்கே வராமல் 12 ஆசிரியைகள் மட்டம் போட்டதையும் ஆய்வில் கண்டுபிடித்த மாவட்ட கலெக்டர் , அடுக்கடுக்கான கேள்விகளால் அங்கிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை வறுத்தெடுத்தார்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை அடுத்த பொரணி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

18 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா விடுப்பால் செயல்படாத இந்த பள்ளி திறக்கப்பட்ட இரு தினங்களிலேயே உயிரியல் முதுநிலை ஆசிரியையாக பணியாற்றி வரும் ஆதிலோகநாயகி தனக்கு கொரோனா எனக்கூறி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆதிலோக நாயகிக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு வந்து சென்ற பின்னர் கொரனோ தொற்று பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகு சனிக்கிழமை அந்த ஆசிரியை பள்ளிக்கு வராததால், தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு கொரனோ தொற்று உறுதியானதாக ஆதிலோகநாயகி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகம் முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆசிரியை வெள்ளியணையில் உள்ள அவரது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டதோடு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் வரவில்லை, பெரும்பாலான ஆசிரியைகளும் வரவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரான மருத்துவர் பிரபு சங்கர் இந்த பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

காரை விட்டு இறங்கியதும், வெறிச்சோடிய பள்ளிக்கூடத்தை பார்த்ததும் காண்டான, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரத்திடம் மாணவர்கள் எங்கே ? என கேட்ட போது பள்ளிக்கு விடுமுறை அளித்து விட்டதாக தெரிவித்தார்.

கஷ்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து பள்ளிகளை திறந்துள்ளோம் யாரை கேட்டு பள்ளிக்கு விடுமுறை அளித்தீர்கள் ? வழிகாட்டு நெறிமுறைகள் என்னவென்று தெரியுமா ? என்று கலெக்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் விழிபிதுங்கி போனார் சண்முக சுந்தரம்.

பள்ளியில் குறைந்த பட்சம் 3 பேராவது கொரனோவால் பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது எதன் அடிப்படையில் பள்ளிக்கு விடுமுறை விட்டீர்கள் ? என்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்வி துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பள்ளியில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதை வருகை பதிவேட்டின்படி கண்ட அவர், பள்ளிக்கு வரும் மாணவர்களையும் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்து விட்டால் எப்படி வருவார்கள் ? 18 பேர் பணியாற்றும் பள்ளியில் 6 பேர் மட்டுமே பள்ளியில் இருப்பதாகவும், மீறி ஆசிரியர்கள் எங்கே ? என கேட்டதற்கு, கொரோனா பாதிப்புக்குள்ளான ஆசிரியையோடு தொடர்பில் இருந்தவர் என்று கூறி சமாளிக்க முயன்ற நிலையில், ஆசிரியைகள் ஒன்றாக அமர்ந்து இருந்ததே நடத்தை விதியை மீறியது என்பதால் தலைமை ஆசிரியர் மீது 17பி சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கு மட்டம் போட்ட ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்வதோடு அவர்களுக்கு விடுப்பு நாளுக்கான தண்டச் சம்பளம் வழங்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments