தாலிபன்களின் கைகளில் ஆப்கன் மக்களின் பயொமெட்ரிக் டேட்டாக்கள்?
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் உருவாக்கிய டிஜிட்டல் டேட்டாக்களை கைப்பற்றி உள்ள தாலிபன்கள் அவற்றை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பழிவாங்கக் கூடும் என கூறப்படுகிறது.
90 லட்சம் ஆப்கன் மக்களின் கருவிழி, விரல்ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் அடையாளங்கள், 7 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கன் படையினரின் தரவுகள், சுமார் நான்கே கால் லட்சம் அரசு ஊழியர்களின் பயோமெட்ரிக் அடையாளங்கள் உள்ளிட்டவை தாலிபன்களின் கைகளுக்கு சென்றிருக்க கூடும் என கருதப்படுகிறது.
இவற்றை பயன்படுத்த முடியாமல் போனால் அவற்றை ஹேக் செய்யவோ அல்லது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியை நாடவோ தாலிபன்கள் முயற்சிப்பார்கள் என கூறப்படுகிறது.
சீன, ரஷ்ய மற்றும் ஈரான் உளவுத்துறையினரும் அவர்களுக்கு உதவ வாய்ப்புள்ளதாக அமெரிக்க அனலிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவானவர்களை இந்த டேட்டாக்கள் மூலம் கண்டுபிடித்து அழிக்கும் செயலில் தாலிபன்கள் ஈடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த டேட்டாக்களை முடக்கவோ அல்லது முடிந்தவரை அவற்றை அழிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என 37 டிஜிட்டல் சிவில் உரிமை குழுக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
Comments