லஞ்சம் பெற்று சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஏன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை ? - கர்நாடக உயர்நீதிமன்றம்
சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சிறையில் அவருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சசிகலா தொடர்பான இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் மற்றும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி 30 நாட்கள் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
Comments