தெருவில் கிடந்த வெடிபொருளை கடித்த நாய் வாய் சிதறி பலி..!
கும்பகோணம் பந்தநல்லூர் அருகே தெருவில் கிடந்த வெடிபொருளை கடித்த நாய், வாய் சிதறி பலியானது.
கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் அருள் என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றியிருந்த வெடிபொருளை அப்பகுதியில் சுற்றிதிரிந்த நாய் ஒன்று கடித்த போது வாய் சிதறி பலியானது.
இது குறித்து பந்தலூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அப்பகுதியில் இரவு நேரத்தில் நரிகள் சுற்றிதிரிவதால், நரிகளை பிடிப்பதற்காக வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம், அதை தவறுதலாக நாய் கடித்து இறந்திருக்கலாம் என அப்பகுதியினர் சந்தேகிக்கின்றனர்.
Comments