5 ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கிய சிறுமி உயிரிழப்பு.. நாணயம் தொண்டையில் சிக்கியதால் பரிதாபம்

0 2933

கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

மைசூருவின் அய்யரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கவுசி, கிரிகதானஹள்ளி கிராமத்தில் உள்ள அவளது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தாள். அங்கு கையில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென அதை விழுங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியை உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்கள் அவளது தொண்டையில் சிக்கிய நாணயத்தை வெளியே எடுக்க முயன்றும், முடியாததால் சிறுமி உயிரிழந்தாள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments