பள்ளி மாணவர்களின் புத்தக பைகளில் தலைவர்கள் படங்கள் கூடாது, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களின் புத்தக பைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிடும் நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நோட்டுகள், பைகளில் அரசியல் தலைவர்களை படங்களை அச்சிட தடை கோரிய மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்னாள் முதலமைச்சர் புகைப்படம் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்படாது என்றும், அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தக பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.
Comments