உலகில் முதன்முதலாக எல் சால்வடார் நாட்டில் கரன்சியாக பிட்காயினுக்கு அங்கீகாரம்
உலகில் முதன்முதலாக எல் சால்வடாரில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிட்காயின்கள் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதன் முதலாக ஒரு நாட்டில் அது கரன்சியாக ஏற்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர் புழக்கத்தில் உள்ள எல் சால்வடாரில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிட்காயினை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் என்ன விதமான நன்மைகள் அந்த நாட்டுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முதல்கட்டமாக எல் சால்வடார் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 400 பிட்காயின்களை வாங்கி புழக்கத்தில் விட முடிவு செய்து தற்போது 200 பிட்காயின்களை வாங்கி உள்ளது.எல் சால்வடாரில் 200 பிட்காயின் ஏடிஎம்களும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பிட்காயின்களை அமெரிக்க டாலராக மாற்றிக் கொள்ளலாம்.
Comments