அனைத்து தரப்பினரும் சம அளவில் பயன் பெறும் வகையில் கல்வி இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

0 4000

கல்வி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக மட்டுமின்றி, அனைவருக்கும் சமமானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் நாள் விழாவில், காணொலி மூலம் பங்கேற்ற அவர், Indian Sign Language Dictionary எனப்படும், காது கேளாதோருக்கான, குறியீட்டு மொழி அகராதி, பேசும் புத்தகங்கள் என்ற பெயரில் ஆடியோ புத்தகங்கள், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தர நிர்ணயம் மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். இந்திய குறியீட்டு மொழிக்கான அகராதி முதல் முறையாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், 75 பள்ளிகளுக்கு சென்று மாணாக்கர்களுக்கு விளையாட்டுத் துறை சார்ந்த ஊக்கம் அளிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments