ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுபாடு அறிவித்த தாலிபான்
ஆப்கானிஸ்தானில் புதிய கல்வியாண்டுக்காக கல்வி நிறுவனங்கள் திறந்த நிலையில், தலைநகர் காபுலில் மாணவர்கள் வருகையின்றி கல்வி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நடந்த தாலிபான் ஆட்சியில் இருந்ததை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இந்த முறை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகளும் தனியார் கல்வி மையங்களுக்கு சென்று கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுபாடுகளை தாலிபான் விதித்துள்ளது.
Comments