உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னையை சேர்ந்த தலைமை காவலர்

0 3010

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமனை, டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்டில் நடைபெறவுள்ள உலக ஆணழகன் போட்டியில் தலைமை காவலர்  புருஷோத்தமன் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், புருஷோத்தமனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments