பூமிக்கு அருகே வந்த 1000 ஆவது குறுங்கோளை கண்டுபிடித்தது நாசா
பூமிக்கு அருகே வரும் ஆயிரமாவது குறுங்கோளை நாசா கண்டுபிடித்துள்ளது. 2021 PJ1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் பூமியில் இருந்து சுமார் 17 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த குறுங்கோள் மிகவும் சிறியது என்பதால் ரேடார்களில் அது பதிவாகவில்லை. எனவே அதன் படமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 1 புள்ளி 4 கிலோ மீட்டர் அகலமுள்ள குறுங்கோளை நாசா கண்டுபிடித்தது.
அது மணிக்கு சுமார் 94 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை கடந்து சென்றது. நாசா கண்டுபிடித்த சில குறுங்கோள்கள், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் டினோசர்களை அழித்தது போன்று பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் அளவிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments