ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா

0 7172

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மொத்தமாக 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இந்திய அணி 54.17 சதவீத வெற்றி விகிதம் மற்றும் 26 புள்ளிகளுடன், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

50 சதவீத வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2-வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments