கோவிஷீல்டு இடைவெளியை 4 வாரங்களாக குறைக்க அனுமதிக்கவும்.. மத்திய அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 12 வார இடைவெளிக்கு பதில், 4 வார இடைவெளியில் போட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஏற்றவாறு CoWin செயலியில் மாற்றங்களை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு அரசின் இலவச தடுப்பூசி திட்டத்திற்கு பொருந்தாது என்றும் கட்டண தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கீடெக்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனம், தாங்கள் சுமார் 52 லட்சம் ரூபாய்க்கு தடுப்பூசி வாங்கி வைத்துள்ளதாகவும், தங்களது பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க, அவற்றை அரசின் கால இடைவெளிக்கு காத்திராமல் போட அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் கேரள நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments