3.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2000 வீதம் விதைப் பணம் என்ற திட்டத்தில் வழங்க டெல்லி அரசு திட்டம்

0 3206

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விதைப் பணம் என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ள டெல்லி அரசு தற்போது 3 லட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் வணிகத் திறனை மேம்படுத்தும் முயற்சியாக விதைப் பணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

வேலை தேடுபவர்கள் என்ற இடத்தைத் தவிர்த்து வேலை வழங்குபவர்களாக குழந்தைகளை மாற்றுவதே நோக்கம் என்று கூறிய அவர், முன்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது தற்போது 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments