அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மூழ்கி 24 அரிய வகை விலங்குகள் உயிரிழப்பு

0 2408

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மூழ்கி காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை மிருகங்கள் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

17 ஹாக் எனப்படும் நாற்கொம்பு மான்கள், 2 சதுப்பு நில மான்கள், 2 காண்டாமிருகம், காட்டெருமை, மலைப்பாம்பு மற்றும் லங்கூர் வகை குரங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த 4 வயதான காண்டாமிருக குட்டி உள்ளிட்ட 4 விலங்குகளை மீட்டுள்ளதாக பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசிரங்கா தேசிய பூங்கா ஏறத்தாழ 70 சதவீதம் மழை நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments