நிலவை 9 ஆயிரம் முறை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம்

0 3066
நிலவை 9 ஆயிரம் முறை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம்

சந்திரயான் 2 விண்கலம் நிலவினை 9 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் நிலவின் மேற்பரப்பில் சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் ஆய்வு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அதன் செயல்பாடுகள் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறிய அவர், சந்திரனில் தரையிறங்க சந்திரயான் 3 விண்கலம் தயாராகி வருவதாகவும் சிவன் தெரிவித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments