சுகாஷ் சந்திரசேகர் மோசடி வழக்கில் மேலும் 4 பேர் கைது

0 2629

சுகாஷ் சந்திரசேகரின் மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

திகார் சிறையிலுள்ள பிரபல தொழிலதிபரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக, மத்திய அமைச்சரின் செயலாளர் போல் தொழிலதிபரின் மனைவியிடம் பேசி பணம் பறித்ததாக சுகாஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திகார் சிறையில் இருந்துக் கொண்டே போன் மூலம் பேசி  மோசடி செய்த சுகாஷ் சந்திரசேகருக்கு உடந்தையாக இருந்ததாக அவனது காதலி லீனா மரியாபால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், லீனா மரியாபாலின் மேலாளர் சாமுவேல், சென்னை ஈசிஆர் பங்களாவை வாங்கிக் கொடுத்த தரகர் கமலேஷ் கோத்தாரி, சொகுசு கார்களை வாங்க தரகராக இருந்த அருண் முத்து மற்றும் சுகாஷின் வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகியோரையும் கைது செய்து டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments