கொடநாடு வழக்கில் மேல் விசாரணை தீவிரம்- 10வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ஜாயின் உறவினரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ஜாயின் உறவினர் ஷாஜி உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஷாஜியிடம் உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரைத் தொடர்ந்து வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அணிஷிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரிடமும் காலை 10 மணி தொடங்கி தனித்தனியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments