விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4024

படிப்படியாக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக பேரவையில் உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அவர், 2011ஆம் ஆண்டு முதல் 2020 வரை விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு 6349 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார். 

தற்போதைய நிலவரப்படி 2017- 18ஆம் ஆண்டிற்கான நிலுவை உட்பட மொத்தமாக 11லட்சத்து72,817 மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளது எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments