ரூ.100 கோடி பணமோசடி வழக்கில் முன்னாள் மராட்டிய அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
100 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், விசாரணைக்கு வருமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அனில் தேஷ்முக், வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசை சேரந்த அனில் தேஷ்முக் மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்த சச்சின் வாஸ் மூலம் மும்பை பார்களில் இருந்து கோடிக்கணக்கில் மாமூல் வாங்கினார் என சிபிஐ பதிவு செய்த FIRன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
Comments