கர்நாடகாவில் நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி

0 3736

கர்நாடகத்தில் நிபந்தனைகளுடன் விநாயக சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான நிபுணர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டு கட்டுபாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 2 அடிக்கும் மிகாமலும், பொது இடங்களில் 4 அடிக்கும் மிகாமலும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் நடத்தும் விழாவில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளித்தும், விழா நடத்துபவர் தடுப்பூசி அல்லது பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை ஊர்வலம், கலை நிகழ்வுகளுக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments