ஹக்கானி குழுவுடன் துப்பாக்கிச் சண்டை-தாலிபன் தலைவர் முல்லா பராதார் காயம்?
ஆப்கனில் தாலிபன் நிறுவனர்களில் ஒருவரான முல்லா பராதர், சக அமைப்பான ஹக்கானி குழுவுடன் நடந்த மோதலில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாத அரசை அமைக்க வேண்டும் என ஹக்கானியும், சிறுபான்மையினரை உள்ளடக்கிய அரசை அமைக்க வேண்டும் என முல்லா பராதரும் கூறுவதால் ஆப்கனில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. அதிகாரத்தை பிடிப்பது தொடர்பான இந்த தகராறில் ஹக்கானி அமைப்பின் முக்கிய தலைவரான அனஸ் ஹக்கானி, முல்லா பராதரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் வெளியானதும், இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைவர் ஃபயிஸ் ஹமீது காபூலுக்கு சென்றுள்ளார். ஆப்கனின் அதிகாரமிக்க உச்சபட்ச தலைவராக ஹைபதுல்லா அகுந்த்சாதா இருக்க வேண்டும் என்ற முல்லா பராதரின் நிலைப்பாட்டை ஹக்கானிகளும், தாலிபன்களின் வேறு சில பிரிவினரும் ஏற்காததும் மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
Comments