18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தவணை தடுப்பூசி போட்ட முதல்மாநிலம் இமாச்சல்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு கொரோனா தடுப்பூசி போட்டுள்ள மாநிலம் என்ற இலக்கை இமாச்சலப் பிரதேசம் எட்டியதை அடுத்து, தடுப்பூசி போடப்பட்ட பயனாளிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துரையாடுகிறார்.
முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் , இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் இறுதிக்குள் 2தவணை தடுப்பூசிகளையும் செலுத்த இமாச்சல் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Comments