குடும்பத் தகராறில் மாமனாரை கொலை செய்ய கூட்டாளிகளோடு வந்த மருமகனை, கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

0 3722

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குடும்பத் தகராறில் மாமனாரை கொலை செய்ய கூட்டாளிகளோடு வந்த மருமகனை, கிராம மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

உமாபதி என்பவரின் மகளுக்கும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த சத்யநாராயணனுக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்த சத்யநாராயணன், மாமனாரை கொலை செய்யும் நோக்கோடு, அரிவாளுடன் கூட்டாளிகள் 2 பேரை அழைத்துக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு வந்து தகராறு செய்துள்ளான். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி தோட்டத்து வேலியில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு மாமானார் உமாபதி அனுமதிக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததால் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments