அமெரிக்காவில் இடா சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 65ஆக உயர்வு
அமெரிக்காவில் இடா சூறாவளியின் தாக்கத்தால் எற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் சுழற்காற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
இடா சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் லூசியான, நியூ ஜெர்ஸி மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் இன்றியும், குடிநீரின்றியும் பல லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே இடா சூறாவளி குறித்து எச்சரிக்கை விடுப்பது முதல், மீட்பு மற்றும் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை கையாள்வது வரை அனைத்திலும் அரசு மெத்தனத்தோடு செயல்பட்டதாக பல அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு துரிதமாக செயல்பட்டிருந்தால் உயிர்சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
Comments