தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் விளக்கம்
தொடக்கப்பள்ளிகளைத் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், 9 முதல் 12 வகுப்புகளுக்கு முதல் எட்டு நாட்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது, வருகை எப்படி இருக்கிறது, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவற்றை கண்காணித்து வருவதாக கூறினார்.
தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையானதை எடுத்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், கிராமப்புற மாணவர்களுக்காக SPOKEN ENGLISH வகுப்புகளை நடத்துவதாகவும் தெரிவித்தார். தூய்மை பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
மாணவர்களின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டு செயல்படுவதில் தவறில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை அவர் வழங்கினார்.
Comments