புதிய அரசு அமைப்பதில் நீடிக்கும் குழப்பம் : ஆப்கனில் ஹக்கானி-தாலிபன் அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு
எந்த வகையான அரசை அமைப்பது என்பதில் பாகிஸ்தான் ஆதரவு ஹக்கானி அமைப்பினருக்கும், பராதர் தலைமையிலான தாலிபன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்துள்ளதால், ஆப்கனில் அரசு அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது.
தோஹா அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிறுபான்மையினரை உள்ளடக்கிய அரசு அமைக்க வேண்டும் என முல்லா பராதர் கூறும் நிலையில், முற்றிலும் இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என ஹக்கானி அமைப்பை சேர்ந்தவரும் தாலிபன் துணைத் தலைவருமான சிராஜுதீன் உள்ளிட்டோர் பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே காபூலில் தொடர்ந்து தங்கி இருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைமை இயக்குநர் ஃபைஸ் அகமது, இரண்டு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்ய முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், அவர் ஹக்கானி அமைப்புக்கு சாதகமான முடிவு எடுக்க தாலிபன்களை தூண்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments