"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று, பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments