புதுச்சேரியில் இயற்கை சாணம் மூலம் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை தயாரிப்பு
புதுச்சேரி காரியமாணிக்கம் பகுதியில் இயற்கை முறையில் சாணம் மூலம் விநாயகர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் அதனுடன் ஒரு சில இயற்கை மூலிகைகளும் சேர்த்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இதில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் வினாயகர் சிலைகளின் உட்புறம் நான்கைந்து விதைகளும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் வினாயகர் சிலைகளை கரைக்கும்பொழுது அந்த விதைக்கான உரம் முற்றிலும் அந்த சிலையிலிருந்தே கிடைக்கப்பெறும். இதுவரை விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Comments