டயர் வெடித்ததால் சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி, லாரி மீது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி மோதி விபத்து

0 5228

திருப்பத்தூரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது டயர் வெடித்ததால் திடீரென நிறுத்தப்பட்ட டேங்கர் லாரியின் மீது அதற்குப் பின்னால்  மிக அருகே வந்துக்கொண்டிருந்த  பால் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

கிரி சமுத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தபோது திடீரென அதன் டயர்களில் ஒன்று வெடித்தது. இதனால் ஓட்டுநர் அப்படியே லாரியை சாலையில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த லாரிக்கு பின்னால் மிக அருகே வேகமாக வந்துக்கொண்டிருந்த பால் டேங்கர் லாரி கட்டுப்பாடை இழந்து, அதன் பின்பக்கம் மீது மோதி சிதைந்தது.

இதில் பால் டேங்கர் லாரியின்  ஓட்டுநர் அருள்தாஸ் காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments