கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை - அமைச்சர் கணேசன் அறிவிப்பு
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கட்டுமானத் தொழிலாளர்களின் பத்தாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப்படிப்புக்கான கல்வி உதவித் தொகை நாலாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.
Comments