தாலிபான்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 17 பேர் பலி எனத் தகவல்

0 4871

ப்கானிஸ்தானில் கொண்டாட்ட மிகுதியில்  கண்மூடித்தனமாக தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஞ்சியுள்ள பாஞ்ஷிர் மாகாணமும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக வெளியான தகவலை நம்பி சந்தோஷம் அடைந்த தாலிபான்கள் உற்சாக மிகுதியில்  வானை நோக்கி சுட்டதில்  காபூலில் 17 பேர் பலியானதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே இது குறித்து டிவிட்டரில் செய்தி  வெளியிட்டுள்ள தாலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid, வானை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்குமாறும், துப்பாக்கி குண்டுகள் பொதுமக்களை காயப்படுத்த வாய்ப்பிருப்பதால் தேவையில்லாமல் சுடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments