நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பின் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

0 2375

நியூசிலாந்தில் கடந்த 6 மாதங்களில், முதல்முறையாக ஒருவர் கொரோனாவால் உயிரழந்துள்ளார்.

நியூசிலாந்தில் 6 மாத இடைவேளிக்குப் பின் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போதும் டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவியது.

அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் வசித்த 90 வயது மூதாட்டிக்கு தொற்று பரவியது. வயது முதிர்வு காரணமாக மூதாட்டிக்கு மேலும் சில உடல் உபாதைகள் இருந்ததால் அவரது உடல் வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments