டீ வியாபாரியிடம் ரூ30,000 லஞ்சம்... கோயம்பேடு மார்க்கெட் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை!

0 2493

30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில் கோயம்பேடு மார்க்கெட் மேலாண்மை கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி சிவலிங்கத்திற்கு  சென்னை சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும்  விதித்துள்ளது.

கடந்த 2014 ல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் டீக்கடை நடத்தி வந்த மாணிக்கம் என்பவரிடம் சிவலிங்கம், 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்காவிட்டால் கடையை சீல் வைத்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.

மாணிக்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், மாணிக்கம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்த போது, சிவலிங்கம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு தற்போது சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments