கோவில்களில் இனி மொட்டைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - அமைச்சர் சேகர்பாபு

0 3904
திருக்கோவில்களில் பக்தர்களிடம் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில்களில் பக்தர்களிடம் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு 112 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை உட்பட 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும், மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில், உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும், சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments