சத்தீஸ்கரில் 7 மணி நேரத்தில் 110 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்..? விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
சத்தீஸ்கரில் மருத்துவர் ஒருவர் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்குஜா மாவட்டம் மெயின்பாட் நர்மதாபூர் சமூகநல மையத்தில் அரசு சார்பில் பெண்களுக்காக கருத்தடை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பிஎஸ்.சிசோடியா, 7 மணி நேரத்தில்101 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தியதாக தகவல் வெளியானது.
அரசு விதிகளின் படி ஒரு மருத்துவர் ஒரு நாளில் அதிகபட்சம் 30 பேருக்கு மட்டுமே கருத்தடை சிகிச்சை வழங்கலாம் என்பதால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் 101 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments