கை பம்ப்பை அடித்து, நீரை வீணாக்காமல் குடிக்கும் யானையின் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்
கை பம்ப்பை அடித்து அதில் இருந்து கொட்டிய நீரை வீணாக்காமல் ஒரு யானைஅருந்தும் வீடியோவை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் பகிர்ந்து உள்ளது.
நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஜல் சக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் தாகத்தை தணிக்கும் அளவுக்கு மட்டும் யானை பம்ப் அடித்து அதிலிருந்து கொட்டிய நீரை குடிக்கிறது.
”ஒரு யானைக்குக் கூட ஒவ்வொரு துளி நீரின் முக்கியத்துவம் குறித்து தெரிந்திருக்கும் நிலையில், ஏன் மனிதர்கள் விலைமதிப்பற்ற நீர் ஆதாரத்தை வீணடிக்கின்றனர்? என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது .
एक हाथी भी #जल की एक-एक #बूंद का महत्व समझता है। फिर हम इंसान क्यों इस अनमोल रत्न को व्यर्थ करते हैं?
— Ministry of Jal Shakti ?? #AmritMahotsav (@MoJSDoWRRDGR) September 3, 2021
आइए, आज इस जानवर से सीख लें और #जल_संरक्षण करें। pic.twitter.com/EhmSLyhtOI
Comments