சென்னை மெரினாவில் பொழுது போக்கு படகு சவாரி துவங்கப்படும் - சுற்றுலாத்துறை
சென்னை மெரினாவில் பொழுது போக்கு படகு சவாரி உள்ளிட்ட 30 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும் என்றும், மதுரை, கொடைக்கானல், இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவைப் படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். ஏலகிரியில் இளம் வயது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாராகிளைடிங், மலை ஏற்றம், இயற்கை வழி நடைப்பயணம், திறந்தவெளி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி இடையே சொகுசுக் கப்பல் மற்றும் படகுச் சேவையை அறிமுகப்படுத்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments