பேரவையில் ஜெயக்குமாரை சுட்டிக்காட்டி முதலமைச்சரைப் புகழ்ந்த திமுக எம்எல்ஏ... நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதலமைச்சர் அறிவுரை..

0 3410
சட்டப்பேரவையில் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் எனத் திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுரை கூறினார்.

சட்டப்பேரவையில் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் எனத் திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுரை கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எந்தப் படைக்குத் தளபதி எனக் கூறியதைக் குறிப்பிட்டுச் சட்டப்பேரவையில் கும்பகோணம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசினார்.

சட்டமன்றத் தேர்தலில் தளபதியாகத் தலைமையேற்றுச் சாதாரணத் தொண்டனை தேர்தலில் நிற்க வைத்து ஜெயக்குமாரைத் ஸ்டாலின் தோற்கடித்ததாகக் குறிப்பிட்டார்.  அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கவனம் செலுத்திப் பேச வேண்டும் என்றும், தன்னைப் புகழ்ந்து பேசியும், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments