ஆம்னி வேன் பின்னால் டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 9296
ஆம்னி வேன் பின்னால் டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, அதிவேகமாகச் சென்ற கொரியர் நிறுவன வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஆம்னி வேன் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொங்கலூரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளரான பிரசாந்த் என்பவர் தனது மனைவி, இரண்டு மகன்கள், உள்ளிட்டோருடன் ஆம்னி வேனில் பல்லடம் நோக்கிச் சென்றுள்ளார். உள்ளே சிறுவர்கள் இருந்ததால் ஆம்னி வேன் மெதுவாக சென்று கொண்டிருந்திருக்கிறது.

பிஏபி வாய்க்காலைக் கடந்து சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த வி.எக்ஸ் கொரியர் நிறுவனத்துக்குச் சொந்தமான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று ஆம்னி வேனின் பின்பக்கம் மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆம்னி வேன் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் சிறுவர்கள் இருவரும் லேசாக காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடம் சறுக்கலான பகுதி என்று கூறப்படும் நிலையில், டாடா ஏஸ் வாகனம் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments