கோவிட் இறப்புகளுக்கான சான்றிதழ்களை வழங்கும் விவகாரம் ; மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்
கோவிட் இறப்புகளுக்கான சான்றிதழ்களை வழங்க நெறிமுறைகள் மற்றும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க தேசிய காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வருகிற 11 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
இது தொடர்பான பொதுநல வழக்கில், ஏற்கனவே இருமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம் கோரினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் கொரோனா 3வது அலையே முடிந்து விடும் என்று தெரிவித்தனர். இது தான் இறுதி வாய்ப்பு என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Comments