இங்கிலாந்து வீரர்களை பார்த்து இனவெறி கோஷம் ; பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசிய ஹங்கேரி பார்வையாளர்கள்

0 2970
பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசிய ஹங்கேரி பார்வையாளர்கள்

புடாபெஸ்ட்ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர்களை பார்த்து ஹங்கேரி பார்வையாளர்கள் இனவெறி கோஷங்கள் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹங்கேரி- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், இங்கிலாந்தின் Raheem Sterling முதல் கோலை அடித்தார். அதை பொறுத்துக் கொள்ளமுடியாத ஹங்கேரி பார்வையாளர்கள் சிலர் Raheem-ஐ குறிவைத்து இனவெறி கோஷங்களை எழுப்பியதுடன் பிளாஸ்டிக் பாட்டில்களை இங்கிலாந்து வீரர்கள் மீது வீசினர்.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர்கள் மீது நடந்த தாக்குதல் ஒரு வெட்கக்கேடான விஷயம் என்று தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இது குறித்து FIFA அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments