இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் மறைவு எனக்கு பேரிழப்பு - நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.பி. ஜனநாதன் சில மாதங்களுக்கு முன் காலமானார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, எஸ்.பி. ஜனநாதனின் மறைவு தமக்கு பேரிழப்பு எனவும், தந்தை மகன் உறவு போல் அவரை இழந்த பின்பு தான் அவர் அருமை தெரிகிறது எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.
திரையரங்குகளை திறக்க அனுமதித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
Comments