காற்று மாசுபடுவதால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 6 ஆண்டுகள் வரை குறைகிறது - அமைச்சர் மெய்யநாதன்
காற்று மாசுபடுவதால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 6 ஆண்டுகள் வரை குறைவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
பேரவையில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆயிரத்து 180 பெரிய தொழிற்சாலைகள் உள்ளதாகவும், அதிக மாசுக்காற்றை வெளியிடக்கூடிய Red Zone மண்டலத்தில் 12 ஆயிரம் தொழிற்சாலைகளும், Orange மண்டலத்தில் 26 ஆயிரம் தொழிற்சாலைகளும், பச்சை மண்டலத்தில் 11 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளதாக தெரிவித்தார்.
காற்று மாசு அடைவதால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 6 ஆண்டுகள் வரை குறைவதாகவும், ஆகையால் மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், மலைக்காற்று, பூங்காற்று, வாடைக்காற்று என 15 வகையான காற்றின் பெயர்களை பட்டியலிட்டார்.
Comments