கேரளத்தில் பதினோராம் வகுப்புத் தேர்வுகளை தொடங்க உச்சநீதிமன்றம் தடை

0 2256

கேரளத்தில் பதினோராம் வகுப்புத் தேர்வுகளை செப்டம்பர் ஐந்தாம் நாள் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளத்தில் பதினோராம் வகுப்புக்கு செப்டம்பர் 5 முதல் 27 வரை தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. கேரளத்தில் ஒரு நாளில் 35ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்த இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கேரள அரசு வழக்கறிஞர் தெரிவித்தபோதும், செப்டம்பர் 5 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தேர்வைத் தொடங்கத் தடை விதித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments